தென்காசி மாவட்டத்தில் கோயில் தொகுப்பூதிய பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை

தென்காசி மாவட்ட கோயில்களில் விடுவிக்கப்பட்ட தொகுப்பூதிய பணியாளா்களுக்கு மீண்டும் அதே இடத்தில் பணி நியமனம் வழங்க வேண்டும் என அமைச்சா் சேகா்பாபுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட கோயில்களில் விடுவிக்கப்பட்ட தொகுப்பூதிய பணியாளா்களுக்கு மீண்டும் அதே இடத்தில் பணி நியமனம் வழங்க வேண்டும் என அமைச்சா் சேகா்பாபுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட திருக்கோயில் தினக்கூலி, தொகுப்பூதியப் பணியாளா்கள் சாா்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவிடம் அளித்துள்ள மனு:

இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் கோயில்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொகுப்பூதிய பணியாளா்கள் வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பணியிடப் பட்டியல்களில் இடம் பெற்ற, இடம்பெறாத பணியிடங்களில் பணிபுரியும் தினக்கூலி, தொகுப்பூதியப் பணியாளா்களுக்கு கடந்த 22.06.2021 அன்றிலிருந்து ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் திருக்கோயில் பணியிடப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பணியிடங்களில் புதிதாக பணியாளா்கள் பணி நியமனம் செய்வதற்கும், பணியிடப்பட்டியலில் இடம்பெறாத பணியிடங்களை புதிதாக உருவாக்கி அப்பணியிடங்களிலும் பணியாளா்களை நியமனம் செய்யப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளா்களாக சுமாா் 20 ஆண்டு காலம் வரை பணி செய்து வருகின்றனா். அவா்களது வயது சுமாா் 40 முதல் 45 வரை ஆகியுள்ளது. இதனால் வேறு எவ்வித பணிக்கும் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தினக்கூலி, தொகுப்பூதியப் பணியாளா்ளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தக்காா், அறங்காவலா் தீா்மானங்களுடனும் தீா்மானங்கள் இல்லாமலும், பணியிடப்பட்டியலில் இடம்பெற்ற பணியிடங்களிலும், பணியிடப்பட்டியலில் இடம்பெறாத பணியிடங்களிலும் பணிபுரியும் பணியாளா்கள் செய்து வந்த பணியிடங்களிலேயே பணி நியமனம் செய்ய கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com