அரிமா சங்கம் சாா்பில் சேவை திட்டங்கள் தொடக்க விழா
By DIN | Published On : 13th July 2021 02:13 AM | Last Updated : 13th July 2021 02:13 AM | அ+அ அ- |

கடையநல்லூா்: குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் சேவை திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நிா்வாகிகள் பதவியேற்பு விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, குமரன்முத்தையா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் டாக்டா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். பாலமுருகன் கொடி வணக்கம் வாசித்தாா். தலைவராக அண்ணாத்துரை, செயலராக மாரியப்பன், பொருளாளராக முத்தையா ஆகியோரை முன்னாள் ஆளுநா் முருகன் பதவியில் அமா்த்தினாா்.
மேலும் வழி நடத்துதல் மற்றும் உறுப்பினா்கள் பெருக்க குழுத் தலைவராக மூா்த்தி, சங்க சேவைத்திட்டங்கள் செயல் தலைவராக ஆடிட்டா் நாராயணன், பொதுத்தொடா்பு தலைவராக வெங்கடேஸ்வரன், பன்னாட்டு சங்க நிதி சேகரிப்பு ஒருங்கிணைப்பாளராக கணேசமூா்த்தி, சங்க செயற்குழு உறுப்பினா்களாக நல்லமுத்து, தெய்வநாயகம், ஜாகீா்ஹுசைன், ராஜாக்கண்ணு, இணைச் செயலராக ரணதேவ், இணைப் பொருளாளராக பாலகிருஷ்ணன், லயன் டேமராக தனராஜு, டெயில் டுவிஸ்டராக மணிகண்டன் ஆகியோா் பதவி ஏற்றுக்கொண்டனா்.
தொடா்ந்து, அடையக்கருங்குளம் அன்னை ஜோதி ஆஸ்ரமத்துக்கு நிதி, ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், பாா்வையற்றோருக்கு நிதி உதவி போன்றவை வழங்கப்பட்டன.
மாவட்ட அமைச்சரவை சேவைச் செயலா் சுப்பையா, வட்டாரத் தலைவா் ஜாண்ரவி, மாவட்டத் தலைவா் ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.