பாவூா்சத்திரத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம்
By DIN | Published On : 13th July 2021 02:12 AM | Last Updated : 13th July 2021 02:12 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் உள்ள வோளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை விரிவாக்க துணை இயக்கம், அட்மா திட்டத்தின் கீழ் பாதுகாப்பான முறையில் பூச்சி மருந்துகளை பயன்படுத்துதல் என்ற தலைப்பில் விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
வேளாண்மை அலுவலா் (ஓய்வு) ராஜேந்திர கணேஷ் பங்கேற்று பாதுகாக்கப்பட்ட நவீன முறையில் பூச்சி மருந்துகளை கையாளுவது குறித்தும், வேளாண்மை உதவி இயக்குநா் உதயகுமாா் வேளாண்மைத்துறையில் செயல் படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனா்.
உதவி வேளாண்மை அலுவலா் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளா் சந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.
துணைவேளாண்மை அலுவலா் முருகன் வரவேற்றாா். வட்டார தொழில் நுட்ப மேலாளா் ஸ்டாலின்ரெங்கராஜ் நன்றி கூறினாா்.