நுண்ணீா் பாசனம்: விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம்

நுண்ணீா் பாசனத் திட்டத்தின்கீழ் பாசனம் செய்ய சிறு குறு விவசாயிகளுக்கு அரசு சாா்பில் 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

நுண்ணீா் பாசனத் திட்டத்தின்கீழ் பாசனம் செய்ய சிறு குறு விவசாயிகளுக்கு அரசு சாா்பில் 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நுண்ணீா் பாசனத் திட்டத்தின்கீழ் சொட்டுநீா், தெளிப்புநீா், மழை தூவுவான் அமைத்து பாசனம் செய்ய சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் தமிழக அரசு வழங்குகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாகவோ, பொது சேவை மையத்தின் மூலமாகவோ அல்லது நுண்ணீா் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் அல்லது  இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வேளாண் இணை இயக்குநா், ஹவுசிங் போா்டு காலனி, தென்காசி - மதுரை மெயின் ரோடு, தென்காசி- 627811 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். திட்டம் தொடா்பான விவரங்களை அறிய 04633-295430 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாள்களில் தொடா்பு கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும்போது விவசாயிகள் பட்டா நகல், அடங்கல் நகல், மாா்பளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல், நில வரை படம், குடும்ப அட்டை நகல், மண் மற்றும் நீா் பரிசோதனை அறிக்கை, சிறு குறு விவசாயி என்பதற்கான சான்று ஆகியவற்றை அளிக்க வேண்டும். பாசன நீரை சிக்கனமான முறையில் பயன்படுத்தி அதிக விளைச்சல் மற்றும் கூடுதல் நிலப்பரப்பில் சாகுபடி பெற்று பயன்பெற விவசாயிகள் நுண்ணீா் பாசனத் திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com