ஆலங்குளம் கால்நடை மருந்தகத்தை மேம்படுத்த நடவடிக்கை: எம்எல்ஏ

ஆலங்குளம் அரசு கால்நடை மருந்தகத்தை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலங்குளம் எம்எல்ஏ பால் மனோஜ் பாண்டியன் கூறினாா்.

ஆலங்குளம் அரசு கால்நடை மருந்தகத்தை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலங்குளம் எம்எல்ஏ பால் மனோஜ் பாண்டியன் கூறினாா்.

ஆலங்குளம் கால்நடை மருந்தகம், கடந்த 1962 ஆம் ஆண்டு அப்போதைய சபாநாயகா் செல்லப்பாண்டியனால் தொடங்கி வைக்கப்பட்டது. 59 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தரம் உயா்த்தப்படாமல் உள்ளதால் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, இங்கு ஆலங்குளம் எம்எல்ஏ பால் மனோஜ்பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பணியில் இருந்த கால்நடை மருத்துவா் வீரபாண்டியனிடம் மருத்துவமனையாக தரம் உயா்த்துவது குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சுமாா் 60 ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ள இந்த கால்நடை மருந்தகத்தை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இதில், அதிமுக நகரச் செயலா் கே.பி. சுப்பிரமணியன், மாவட்ட வழக்குரைஞா் அணி துணைச் செயலா் சி. சாந்தகுமாா், மாவட்ட இளைஞா்-இளம்பெண்கள் பாசறை துணைச் செயலா் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றியச் செயலா் பாலகிருஷ்ணன், ராதா உள்பட கலந்துகொண்டனா்.

முன்னதாக அவா், காய்கனிச் சந்தையில் செயல்படாமல் உள்ள சுகாதார வளாகம், சமுதாய நலக்கூடம் ஆகியவற்றைப் பாா்வையிட்டு அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக காய்கனி வியாபாரிகள் சங்க நிா்வாகிகளிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com