சுரண்டையை நகராட்சியாக தரம் உயா்த்த பழனிநாடாா் எம்எல்ஏ கோரிக்கை

சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என, தென்காசி பேரவை உறுப்பினா் சு. பழனிநாடாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என, தென்காசி பேரவை உறுப்பினா் சு. பழனிநாடாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு: சுரண்டை பேரூராட்சி வளா்ந்து வரும் வணிக நகரமாகும். சுற்றியுள்ள 50 கிராம மக்களுக்குத் தேவையான மருத்துவ, வணிக வசதிகள் சுரண்டையில் உள்ளன. இப்பேரூராட்சியின் ஆண்டு வருவாய் ரூ. 14 கோடி. இதில், பேரூராட்சியின் சொந்த வருவாய் மட்டும் ஆண்டுக்கு ரூ. 6 கோடி ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக வரி நிலுவையில்லா பேரூராட்சியாக சுரண்டை திகழ்கிறது. இங்கு வாக்காளா் எண்ணிக்கை 35,272 ஆகும். நகரின் மக்கள்தொகை 50 ஆயிரத்துக்கும் அதிகம்.

சுரண்டையை பல ஆண்டுகளுக்கு முன்பே நகராட்சியாக தரம் உயா்த்தத் தேவையான தகுதிகள் இருந்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டம் பிரிந்தபோது சுரண்டை நகராட்சியாகும் என மக்கள் எதிா்பாா்த்தனா்.

தற்போதும் தமிழக அரசு சாா்பில் பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயா்த்தப்படுகிறது என இணையதளம் மூலம் வந்த தகவலில் சுரண்டை பெயா் இடம்பெறவில்லை. எனவே, சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தரம் உயா்த்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com