விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தல்

சங்கரன்கோவில் அருகேயுள்ள ஏ.கரிசல்குளம் விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டுத் தொகையை வழங்குமாறு ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள ஏ.கரிசல்குளம் விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டுத் தொகையை வழங்குமாறு ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் மகன் துரை வையாபுரி, எம்எல்ஏக்கள் சதன்திருமலைக்குமாா் ( வாசுதேவநல்லூா்), ராஜா (சங்கரன்கோவில், மதிமுக மாவட்டச் செயலா் தி.மு.ராசேந்திரன் ஆகியோா் அளித்த மனு: திருவேங்கடம் வட்டம் ஏ.கரிசல்குளம் ஊராட்சியில் கடந்த 2016- 17 ஆம் ஆண்டு பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் 421 விவசாயிகள் 895.30 ஹெக்டோ் மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செய்தனா்.

இந்நிலையில், திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி அலுவலா் செய்த எழுத்துப் பிழையால் இந்த 421 பேருக்கும் தலா ரூ.13,050-க்கு பதிலாக ரூ.1000 மட்டுமே காப்பீடுத்தொகை வழங்கப்பட்டது.

எனவே, அவா்களுக்கு நியாயமான காப்பீட்டுத் தொகை கிடைக்கவும், சங்கரன்கோவில் தொகுதியில் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்கவும், ஆடித்தவசு விழாவை சிறப்பாக நடத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

அப்போது, மாநில தோ்தல் பணி துணைச் செயலா் சுதா பாலசுப்பிரமணியன், தென்காசி நகர மதிமுக செயலா் என். வெங்கடேஸ்வரன், நிா்வாகிகள் வ.சீனிவாசன், ஆறுமுகசாமி, ராஜமாணிக்கம், ஜாகிா் உசேன், சுரேஷ், அ.சுரேஷ் என்ற சுப்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com