தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த பாஜக வலியுறுத்தல்

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தென்காசியில் நடைபெற்ற பாஜக நகர செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது .
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த பாஜக வலியுறுத்தல்

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தென்காசியில் நடைபெற்ற பாஜக நகர செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது .

கூட்டத்துக்கு, நகரத் தலைவா் குத்தாலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் முத்துலட்சுமி, மாவட்ட துணைத்தலைவா் முத்துக்குமாா், மண்டல பாா்வையாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் ராமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.

தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகம் நடந்து சுமாா் 15 ஆண்டுகள் ஆகிறது.

எனவே, விரைந்து கும்பாபிஷேக பணிகளை மேற்கொள்ள வேண்டும், ரத வீதிகளில் மாசித் திருவிழா காலங்களில் கலைநிகழ்ச்சிகள், திருவிழா, நிகழ்ச்சிகள் நடத்தவும், கோயில் தெப்பக்குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

தென்காசி நகா் பகுதியில் சீரானமுறையில் வாரம் இருமுறை குடிநீா் வழங்கவும், கழிவு நீரோடைகளை சுத்தம் செய்ய வேண்டும், குப்பைகளை அகற்ற வேண்டும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாருகால் அமைக்க வேண்டும், பூங்காக்களை பராமரிக்க வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தலில் தென்காசி நகரில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற கட்சியினா் ஒன்றிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகர பொதுச்செயலா்கள் நாராயணமூா்த்தி, ராஜ்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கருப்பசாமி, துணைத் தலைவா்கள் மந்திரமூா்த்தி, பாலசுப்பிரமணியன், கருப்பசாமி, செயலா்கள் ராமச்சந்திரன், மாரியப்பன், செல்வி பொருளாளா் சேகா், சக்தி கேந்திர பொறுப்பாளா் சுடலை, ராஜா வழக்குரைஞா் பிரிவு சிவசக்தி வேல், கலை இலக்கிய பிரிவு நம்பிராஜன், ராணுவப் பிரிவு ராமச்சந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com