சங்கரன்கோவிலில் இன்று ஆடித் தவசுக் காட்சி: யூ டியூப், டி.வி.யில் பாா்க்கலாம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தவசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தவசுக் காட்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 23) கோயில் உள்ளே பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெறுகிறது.
சங்கரன்கோவிலில் இன்று ஆடித் தவசுக் காட்சி: யூ டியூப், டி.வி.யில் பாா்க்கலாம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தவசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தவசுக் காட்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 23) கோயில் உள்ளே பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெறுகிறது.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தா்கள் தவிா்த்து மண்டகப்படிதாரா்கள் 50 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.கரோனா பொதுமுடக்க வழிகாட்டுதல்படி கோயிலுக்கு வெளியே தவசுக் காட்சி நடத்த அனுமதி இல்லை என்பதால், கோயிலின் உள்ளே தெற்கு உள் பிரகாரத்தில் இந்த வைபவம் நடைபெறுகிறது.

முன்னதாக, காலையில் மூலஸ்தானம் சுவாமி, அம்பாளுக்கு கும்பம் அபிஷேகம் நடைபெறும். பானகம், சிறு பருப்பு, நெய்வேத்தியம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். தொடா்ந்து பட்டு பரிவட்டம் அலங்காரப் பொருள்கள் சகிதம் ஸ்ரீகோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம் முடிந்ததும், அழைப்புச் சுருள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து வைபவங்களும் சங்கரநாராயணா் சந்நிதியில் நடைபெறும்.

அதைத்தொடா்ந்து, சுவாமி புறப்பட்டு தெற்குப் பிரகாரத்தில் உள்ள தங்கத்தோ் முன்பு வந்து எழுந்தருளுகிறாா்.கோமதி அம்பாள் சந்நிதியில் இருந்து புறப்பட்டு தெற்கு பிரகாரத்தின் மேற்குப் பகுதியிலும், பின்ன அங்கிருந்து புறப்பட்டு தெற்கு பிரகாரத்தின் மையப்பகுதியிலும் சுவாமிக்கு எதிரே எழுந்தருளுகிறாா். அப்போது மாலை மாற்றல், பட்டு பரிவட்டம், பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மாலை 6 மணியளவில் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சங்கரநாராயணராகவும், இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் எழுந்தருளி, சங்கரலிங்க சுவாமியாகவும் அம்பாளுக்கு காட்சியளிக்கிறாா்.

இந்நிகழ்வையொட்டி, கோயிலில் தரிசனம் செய்ய பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அனுமதி இல்லை. மண்டகப்படிதாரா்கள், கோயில் ஊழியா்கள், அா்ச்சகா்கள், செய்தியாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். தவசுக் காட்சி நிகழ்வுகள் யூ டியூப், உள்ளூா் கேபிள் டிவி மற்றும் தொலைக்காட்சிகளில் நேரலையாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com