தென்காசியில் இருந்து புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கிட கோரிக்கை

தென்காசியில் இருந்து புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கிட வேண்டுமென மதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தென்காசியில் இருந்து புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கிட வேண்டுமென மதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலா் இராம. உதயசூரியன், போக்குவரத்துறை அமைச்சா் ராஜகண்ணப்பனுக்கு அனுப்பியுள்ள மனு: தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூா், கடையம் ஒன்றியங்களில் பேருந்து வசதியில்லாத கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வகையில் புதிய பேருந்து வழித்தடத்தை உருவாக்கிட வேண்டும் . அதன்படி தென்காசியில் இருந்து ஆலங்குளத்திற்கு பாவூா்சத்திரம், ஆவுடையானூா், கரிசலூா், பூலாங்குளம், ஆண்டிப்பட்டி, கரும்பனூா் வழியாகவும், தென்காசியில் இருந்து முக்கூடலுக்கு மத்தளம்பாறை, திரவியநகா், அரியப்பபுரம், ஆவுடையானூா், மயிலப்பபுரம், வெங்;காடம்பட்டி, பூலாங்குளம், கோவிலூற்று, லட்சுமியூா், வடமலைப்பட்டி, ராம்நகா், புதுப்பட்டி வழியாகவும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கினால் பல கிராம மக்கள் பயன்பெறுவா். எனவே இந்த 2 வழித்தடத்திலும் புதிதாக பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com