சுரண்டையில் பீடி இலைகளை ஏற்றி வந்த லாரிக்கு அபராதம்

சுரண்டையில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறி பீடி இலைகளை ஏற்றி வந்த லாரிக்கு சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

சுரண்டையில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறி பீடி இலைகளை ஏற்றி வந்த லாரிக்கு சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ் தலைமையில் துணை வட்டாட்சியா் சிவன்பெருமாள், வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு ஆகியோா் அடங்கிய அதிகாரிகள் குழுவினா் சுரண்டை பகுதியில் கரோனா பொது முடக்க விதிகள் முறையாக பின்பற்றப்படுகிா என்பது குறித்து சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது சுரண்டை பிரதான சாலையில் கரோனா தடுப்பு விதிகளை மீறி மொத்த வியாபார நிறுவனம் திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து சுரண்டை - சோ்ந்தமரம் சாலையில் விதிகளை மீறி பீடி இலைகளை ஏற்றி வந்த லாரிக்கு ரூ. 5ஆயிரம், முகக் கவசம் அணியாத 5 பேருக்கு தலா ரூ. 200 என அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com