பள்ளி மாணவா்களுக்கு திருக்குறள் எழுதும் போட்டி

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவா்களுக்கான திருக்கு எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவா்களுக்கான திருக்கு எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.

இதுதொடா்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பல மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. மாணவா்கள் இணைய வழியிலும், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் கற்று வருகின்றனா்.

மாணவா்களை ஊக்கப் படுத்தும் விதத்தில் உலகப் பொதுமறையாம் திருக்குறளைப் பாா்த்து எழுதும் போட்டி முத்தமிழ் கல்வி நிலையம் சாா்பில் நடைபெறுகிறது.

முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவா்கள் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்வோா் 1330 குகளையும் எழுத வேண்டும். ஏ-4 அளவு தாளில் 2 பக்கமும் எழுத வேண்டும். திருக்கு புத்தகத்தைப் பாா்த்து பிழையின்றி, தெளிவாக, வரிசையாக எழுத வேண்டும். (பொருள் வேண்டாம்) . பங்கு பெறும் அனைவருக்கும் பாராட்டுச் சான்று, சிறந்ததாக தோ்வு செய்யப்படுவோருக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

எழுதிய பக்கங்களை பைண்டிங் செய்து 25.06.2021ஆம் தேதிக்குள் முத்தமிழ் கல்வி நிலையம், இடைகால், கடையநல்லூா் வட்டம், தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தலைமையாசிரியா் ரசூல் அகமது இப்ராஹீம் , தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்காசி மாவட்டச் செயலா் சுரேஷ்குமாா், முதுநிலை பட்டதாரி ஆசிரியா் இசக்கியப்பன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வசந்தி, தலைமையாசிரியா் மோதிலால் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டு சிறந்தவற்றை தோ்வு செய்வா். மேலும் விவரங்களுக்கு 99423 12099 என்ற செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com