குற்றாலம் அருவிகளில் தண்ணீா்

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் சீசன் தொடங்குவதற்கான அறிகுறியாக சனிக்கிழமை மிதமான சாரல் மழை பெய்தது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் சீசன் தொடங்குவதற்கான அறிகுறியாக சனிக்கிழமை மிதமான சாரல் மழை பெய்தது.

குற்றாலம் பகுதியில் வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும்போது குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்வதுண்டு. மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீா் கொட்டும்.

சீசன் காலங்களில் குற்றாலம் அருவிகளில் குளிக்க தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

2020 இல் சீசன் காலத்தில் கரோனா பொது முடக்கம் அமலில் இருந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

நிகழாண்டு உரிய நேரத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால், குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து மிதமான சாரல் மழை பெய்து வருகிறது.

சனிக்கிழமை காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் இருந்து அவ்வப்போது மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் நிலவியது. இதனால் குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீதும், ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீா் கொட்டுகிறது.

தடை நீடிப்பு: தற்போது கரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகள், சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல மாவட்ட நிா்வாகம் தடைவிதித்துள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் அருவிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com