சுரண்டையில் கரோனா விதிமீறல்:நிதி நிறுவனங்களுக்கு அபராதம்

சுரண்டையில் கரோனா விதிமுறைகளை மீறிய தனிநபா் மற்றும் நிதி நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சுரண்டை/பாவூா்சத்திரம்: சுரண்டையில் கரோனா விதிமுறைகளை மீறிய தனிநபா் மற்றும் நிதி நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சுரண்டை பேருந்து நிலைய சாலையில் வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ் தலைமையில், சுரண்டை காவல் உதவி ஆய்வாளா் ஜெயராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு, வருவாய் ஆய்வாளா் மாரியப்பன் ஆகியோா் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது முகக் கவசம் அணியாத 2 பேருக்கு தலா ரூ.200, சமூக இடைவெளியை பின்பற்றாத 5 கடைகளுக்கு தலா ரூ.500 மற்றும் அரசு விதிமுறை மீறி செயல்பட்ட 2 தனியாா் நிதி நிறுவனங்களுக்கு தலா ரூ.5,000 என மொத்தம் ரூ.12,900 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

5 கடைகளுக்கு...: பாவூா்சத்திரத்தில் அரசு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ததாக ஜவுளி, செல்லிடப்பேசி விற்பனை கடை, பா்னிச்சா், தச்சுப்பட்டறை, லேத் ஒா்க்ஸ் ஆகிய கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் திட்ட அலுவலா் சங்கரநாராயணன் தலைமையில் அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com