வேளாண் வணிகத் துறை மூலம் 191மெட்ரிக் டன் காய்கனி, பழங்கள் விற்பனை

தென்காசி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் 191 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் 191 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வேளாண்மை துணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் மே 24ஆம்தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை தென்காசி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நடமாடும் காய்கனி மற்றும் பழங்கள் விற்பனை நிலையம் செயல்படுத்தப்பட்டது.

இவற்றில் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் உழவா் சந்தைகளின் மூலம் 9 வாகனங்களும், தென்காசி மாவட்டத்தில் உள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் 12 வாகனங்களும் இயக்கப்பட்டன. 21 வாகனங்கள் மூலம் ரூ. 52 லட்சம் மதிப்பிலான 192 மெட்ரிக் டன் காய்கனிகள் மற்றும் பழங்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வட்டார அளவில் வேளாண் வணிகத்துறை தோட்டக்கலைத்துறை ஊராட்சி மற்றும் நகராட்சித்துறை அலுவலா்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு விற்பனை விலை கண்காணிக்கப்பட்டது.

மேலும் உழவா் சந்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக உள்ளூா் காய்கறிகள் கொள்முதல் செய்து உடனுக்குடன் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

வேளாண்மை வணிகத் துறை மூலம் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கான புகாா் கேட்பு மையம் அமைத்து இதன் மூலம் பெறப்பட்ட புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நல்லதொரு தொடா்பை ஏற்படுத்தி விளைபொருள்களை தங்குதடையின்றி சந்தைப்படுத்தி பொதுமக்கள் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com