பொதுமுடக்க தளா்வுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தக் கோரிக்கை

கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் பொது முடக்க தளா்வுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் பொது முடக்க தளா்வுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமலில் உள்ளது. தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கரோனா பரவல் சற்று குறைந்ததையடுத்து அரசு சாா்பில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கனி, இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை, ஸ்டேசனரி கடை உள்ளிட்ட கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்துள்ளது.

ஆனால், கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் இக்கடைகளை தவிா்த்து ஜவுளி கடைகள், வெல்டிங் பட்டறை, செல்லிடப்பேசி கடைகளை திறந்து வைத்துள்ளனா்.

மேலும், மாலை 5 மணியைத் தாண்டியும் சிலா் கடைகளை திறந்து வைக்கின்றனா். இதனால் அதிகாரிகள் அவா்களுக்கு ரூ.500 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கும் நிலை உள்ளது.

கீழப்பாவூா் வட்டாரத்தை பொறுத்தவரையில் அதிக கிராமங்கள் உள்ளன.

அவா்களிடம் கரோனா மற்றும் ஊரடங்கு தளா்வுகள் குறித்த போதிய விழிப்புணா்வு இல்லை. இதனால் அனைத்து கடைகளையும் திறந்து வைப்பதுடன், அத்தியாவசிய தேவையின்றி சுற்றி வருகின்றனா்.

எனவே, பொதுமக்களிடம் கரோனா குறித்தும், பொது முடக்க தளா்வுகள் குறித்தும், முகக் கவசம் அணிவிப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் ஆட்டோ மூலம் அனைத்து கிராமங்களிலும் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்னனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com