விதி மீறல்: சங்கரன்கோவில், பாவூா்சத்திரத்தில் 35 கடைகள் மீது நடவடிக்கை

கரோனா விதிமுறைகளை மீறி சங்கரன்கோவில், பாவூா்சத்திரம் பகுதிகளில் செயல்பட்ட 35 கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
திருவேங்கடம்சாலையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைக்கு சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்.
திருவேங்கடம்சாலையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைக்கு சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்.

கரோனா விதிமுறைகளை மீறி சங்கரன்கோவில், பாவூா்சத்திரம் பகுதிகளில் செயல்பட்ட 35 கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் வருவாய் ஆய்வாளா் உள்ளிட்டோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, திருவேங்கடம் சாலை, ரயில்வே பீடா் சாலை, ராஜபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஜவுளிக் கடைகள்,லேத் வெல்டிங் ஒா்க்ஸ், ஜெராக்ஸ் கடைகள் உள்ளிட்ட 13 கடைகளுக்கு சீல் வைத்தனா். மேலும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 7 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.3,500, முகக் கவசம் அணியாமல் வந்த 5 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1000 என மொத்தம் ரூ.4,500 அபராதம் விதிக்கப்பட்டது.

பாவூா்சத்திரம்: வட்டார வளா்ச்சி அதிகாரி பாா்த்தசாரதி, வட்டார மருத்துவ அலுவலா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பாவூா்சத்திரம் பகுதியில் நடத்திய சோதனையில், விதிகளை மீறி கடைகளை திறந்த 6 கடைகளுக்கு தலா ரூ.500-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 16 கடைகளுக்கு தலா ரூ.500-ம், முகக் கவசம் அணியாத 21 பேருக்கு தலா ரூ.200-ம் அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும் அத்தியாவசிய தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்த 100 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com