கரோனா தடுப்பு விதிமீறல்: ரூ.37,200 அபராதம் விதிப்பு
By DIN | Published On : 11th June 2021 02:18 AM | Last Updated : 11th June 2021 02:18 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவா்களுக்கு வியாழக்கிழமை ரூ.37,200 அபராதமாக விதிக்கப்பட்டது.
கீழப்பாவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்தசாரதி, லிங்கராஜ், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ஆசீா், சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பாவூா்சத்திரம் பகுதியில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது, கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் கடைகளை திறந்து வைத்திருந்தோா், சமூக இடைவெளியை பின்பற்றாதவா்கள், முகக் கவசம் அணியாதவா்களுக்கு உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை ஆகியவற்றின் சாா்பில் முறையே ரூ.10,000, ரூ.12,200, ரூ.15,000 என ரூ.37,200 அபராதம் விதிக்கப்பட்டது.