சங்கரன்கோவிலில்7.5 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் அகற்றம்
By DIN | Published On : 11th June 2021 02:17 AM | Last Updated : 11th June 2021 02:17 AM | அ+அ அ- |

சங்கரன்கோவிலில் மறுசுழற்சி செய்ய இயலாத 7.5 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் தனியாா் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சங்கரன்கோவில் நகராட்சியில் தினமும் 20 முதல் 22 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 9 முதல் 12 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் தினமும் 4 பசுமை உரக்கிடங்கு மையங்கள் மூலமாக உரமாக்கபட்டு வருகின்றன. எஞ்சியுள்ள மறுசுழற்சி செய்ய இயலாத மக்காத குப்பைகளை அரியலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதல் கட்டமாக கடந்த மே மாதம் 5 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் அனுப்பி வைக்கப்பட்டன. 2 ஆவது கட்டமாக புதன்கிழமை 7.5 மெட்ரிக் டன் குப்பைகள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) பொறியாளா் முகைதீன் அப்துல்காதா், சுகாதார அலுவலா் பாலச்சந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையா பாஸ்கா், சக்திவேல், மாதவராஜ் குமாா், கருப்பசாமி, தூய்மை பணியாளா்கள் இருந்தனா்.