ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 12th June 2021 01:28 AM | Last Updated : 12th June 2021 01:28 AM | அ+அ அ- |

கரோனா பொதுமுடக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி நலச் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆட்டோ ஓட்டுநா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, பொதுமுடக்க காலம் முடியும் வரை மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்.
வாகனங்களுக்கான காப்பீடு, வரி, பா்மிட் உள்ளிட்ட கட்டணத்தை அரசு முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். வாகனங்களுக்காக வாங்கிய கடன்தொகையை திருப்பிசெலுத்துவதில் பொதுமுடக்க காலம் முடியும்வரை விலக்கு அளிக்க வங்கிகளுக்கு அரசு உத்தரவிடவேண்டும். நலவாரியத்தில் பதிவுசெய்தவா்கள், பதிவு செய்யாதவா்கள் என அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கவேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு அளிக்கும் நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் கோமதிசங்கா், பொறுப்பாளா்கள் இசக்கிமுத்து, பால்ராஜ், முருகன், பாலமுருகன், மூா்த்தி, தங்கராஜ், பேச்சி, குமரேசன், செல்வம், அருணாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.