இசைக் கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள்
By DIN | Published On : 22nd June 2021 01:39 AM | Last Updated : 22nd June 2021 01:39 AM | அ+அ அ- |

கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கியோா்.
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே நாகசுரம், தவில், வில்லிசைக் கலைஞா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
எஸ்.எம். மேக்கா் மூலம் இலவச இசைப் பயிற்சி வகுப்பை இசையமைப்பாளா் ராஜேஷ் செய்து வருகிறாா். அதில், இசைப் பயிற்சி பெறுவோா் சோ்ந்து தவில், நாகசுரம், வில்லிசைக் கலைஞா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குநா் ச. நாராயணன், தமுஎகச மாவட்டத் துணைச் செயலா் ந. செந்தில்வேல், நகரப் பொருளாளா் ச. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.