வாசுதேவநல்லூா் அருகே பிடிபட்ட அரியவகை இரட்டை சக்கர நாகம்
By DIN | Published On : 29th June 2021 02:35 AM | Last Updated : 29th June 2021 02:35 AM | அ+அ அ- |

கடையநல்லூா்: வாசுதேவநல்லூா் அருகே வீட்டில் புகுந்த அரியவகை நாகத்தை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.
முள்ளிக்குளம் பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்தவா் குருவம்மாள். இவரது வீட்டில் நாகம் ஒன்று நுழைந்துவிட்டதாம். தகவலறிந்த வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ஷேக் அப்துல்லா, போக்குவரத்து அலுவலா் செல்வமுருகேசன் மற்றும் தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று வீட்டில் இருந்த அரிய வகையான 4 அடி நீளமுள்ள இரட்டை சக்கர நாகத்தை பிடித்து, அதை வனத்துறையிடம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் அன்த நாகத்தை காட்டுப்பகுதியில் கொண்டுவிட்டனா்.