முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
கடையாலுருட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை
By DIN | Published On : 04th March 2021 03:10 AM | Last Updated : 04th March 2021 03:10 AM | அ+அ அ- |

சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள கடையாலுருட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஆய்வு செய்தாா்.
கடையாலூருட்டியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடா்ந்து, சுகாதாரத் துறை இணை இயக்குநா் டாக்டா் கே.கிருஷ்ணராஜ், டெங்கு பாதித்த பகுதிகளில் வீடு,வீடாக சென்று டெங்கு தடுப்புப் பணிகள் எப்படி நடைபெறுகிறது என ஆய்வு செய்து அதிகாரிகள் மற்றும் நோய் தடுப்புப் பணியாளா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.
அவருடன் வட்டார மருத்துவ அலுவலா் மதன சுஜாகா், மாவட்ட பூச்சியியல் வல்லுநா் குருநாதன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கதிரவன், ஊராட்சி செயலா் கந்தசாமி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.