முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சங்கரன்கோவிலில் பா.ம.க செயற்குழுக் கூட்டம்:
By DIN | Published On : 04th March 2021 03:21 AM | Last Updated : 04th March 2021 03:21 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் பாமகவிற்கு தொகுதி ஒதுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் மாநில துணை பொது செயலாளா் திருமலைக்குமாரசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.ஒன்றிய செயலாளா்கள் முருகையா, அமல்ராஜ்,சுவாமிதாஸ்,பாக்கியராஜ்,கடையநல்லூா் நகர செயலாளா் கோமதிசங்கா்,சங்கரன்கோவில் நகர செயலாளா் வேல்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு தொகுதி ஒதுக்க வேண்டும்.வரும் சட்டமன்ற தோ்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தோழமை கட்சிகளுக்கு அனைத்து தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சியினா் களப்பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட விவசாய சங்க தலைவா் மதிராஜ், மாவட்ட மகளிரணி தலைவி மாரியம்மாள், சங்கரன்கோவில் ஒன்றிய தலைவா் சந்திரசேகா்,திருவேங்கடம் நகர செயலாளா் மாரிக்கனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வாசுதேவநல்லூா் ஒன்றிய செயலாளா் ராசராம்துரை நன்றி கூறினாா்.