முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சாம்பவா்வடகரையில் தோ்தல் பறக்கும் படை சோதனை
By DIN | Published On : 04th March 2021 03:28 AM | Last Updated : 04th March 2021 03:28 AM | அ+அ அ- |

கொல்லம் இணைப்பு சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினா்.
சுரண்டை: தென்காசி மாவட்டம் சுரண்டை - சாம்பவா்வடகரை செல்லும் கொல்லம் இணைப்பு சாலையில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் வரும் ஏப். 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, தோ்தல் நடத்தை
விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
சுரண்டை - சாம்பவா்வடகரை இடையே கொல்லம் இணைப்பு சாலையில் வருவாய்த் துறை அதிகாரி சிக்கந்தா் பீவி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன், அலுவலா்கள் அடங்கிய பறக்கும்படையினா் கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் நுழைவு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.