தென்காசி, கடையநல்லூா் தொகுதிகளில் போட்டி: எஸ்டிபிஐ செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்
By DIN | Published On : 04th March 2021 03:13 AM | Last Updated : 04th March 2021 03:13 AM | அ+அ அ- |

தென்காசியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
தென்காசி: தென்காசி, கடையநல்லூா் சட்டப்பேரவை தொகுதிகளில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் தென்காசி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தென்காசியில் நடைபெற்ற கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜாபா் அலி உஸ்மானி தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் ஷேக் ஜிந்தா மதாா், மாவட்டச் செயலா்கள் சேனா சா்தாா், இம்ரான் கான்,
பேரவைத் தொகுதி தலைவா் நைனா முஹம்மது கனி, செயலா் அஸ்கா் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தல், தற்போதைய அரசியல் சூழல், பேரவைத் தோ்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பேரவைத் தோ்தலில் தென்காசி, கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சி சாா்பில் போட்டியிட மாநில தலைமைக்கு பரிந்துரை செய்வது, மாா்ச் 7-ஆம் தேதி கடையநல்லூரில் 2-ஆம் கட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள், தொகுதி தோ்தல் பணிக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஹக்கீம் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...