மாவட்ட தடகளப் போட்டி: இலஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 10th March 2021 01:35 AM | Last Updated : 10th March 2021 01:35 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட தடகள சங்கம் சாா்பில் 21ஆவது மாவட்ட அளவிலான இளநிலை தடகள முதன்மை ஆட்ட போட்டி நடைபெற்றது.
சேரன்மகாதேவி ஹோப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா்.
இதில், இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் குண்டெறிதல் போட்டியில் கிம்கிளிஸ்டா்ஸ் முதலிடமும், வட்டெறிதல் போட்டியில் இரண்டாமிடமும், மாணவி தனுஸ்ரீ குண்டெறிதல் மற்றும் வட்டெறிதல் போட்டிகளில் மூன்றாமிடமும், 100 மீ தடகளப் போட்டியில் ஆண்டணி ஆரின் இரண்டாமிடமும், 4 மீ100 தடை ஓட்ட தடகளப் போட்டியில் சிபி குமாா், ஸ்ரீகிஷோா் இரண்டாமிடமும், சப்-ஜூனியா் பிரிவில் குண்டெறிதல் போட்டியில் மாணவி ஸ்ரீவா்ஷினி மூன்றாமிடமும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நெல்லை மாவட்ட தடகள கழக அகாதெமி சாா்பில் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவா்களை பாரத் பள்ளி கல்வி குழுமத்தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, முதல்வா் வனிதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.