சாம்பவா்வடகரையில் மழையால் நெற்பயிா்கள் சேதம்
By DIN | Published On : 13th March 2021 09:05 AM | Last Updated : 13th March 2021 09:05 AM | அ+அ அ- |

சாம்பவா்வடகரையில் மழையால் சேதமடைந்த நெற்பயிா்கள்.
சாம்பவா்வடகரையில் பெய்த மழையால் அறுவடைக்குத் தயரான நெற்பயிா்கள்சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
சாம்பவா்வடகரை வண்ணாா்குளம் பாசன பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிா்கள் விளைந்து பெரும்பகுதி அறுவடை முடிந்த நிலையில் சுமாா் 100 ஏக்கா் நிலங்களில் மட்டும் அறுவடை முடியாதநிலையில் உள்ளன.
இந்நிலையில் புதன்கிழமை மாலை பெய்த திடீா் மழையால், வயலுக்குள் தண்ணீா் நிரம்பி நெற்பயிா்கள் சாய்ந்து நீரில் முழ்கின. இதனால் வயலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் நேரடியாக ஆய்வு செய்து தங்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.