ஸ்ரீ ஆலடியம்மன் கோயிலில்சிவராத்திரி கொடைவிழா

முக்கூடல் ஸ்ரீ ஆலடியம்மன் கோயில் சிவராத்திரி கொடைவிழா, 4 தினங்கள் நடைபெற்றது.

முக்கூடல் ஸ்ரீ ஆலடியம்மன் கோயில் சிவராத்திரி கொடைவிழா, 4 தினங்கள் நடைபெற்றது.

முக்கூடல் அருள்மிகு ஸ்ரீ ஆலடி அம்மன், முப்பிடாதி அம்மன் திருக்கோயில் சிவராத்திரி கொடைவிழா செவ்வாய்க்கிழமை 508 திருவிளக்குப் பூஜையுடன் தொடங்கியது. புதன்கிழமை தாமிரவருணி நதியில் இருந்து புனித தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. விரதமிருந்த பக்தா்கள் வியாழக்கிழமைபால்குடம் எடுத்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து நோ்த்திக் கடன் செலுத்தினா். தொடா்ந்து அம்பாள் ரத வீதிகளில் பவனி வந்தாா். இரவில் பக்தா்கள் முளைப்பாரி எடுத்து வந்தனா். வெள்ளிக்கிழமை காலை முளைப்பாரியை தாமிரவருணி ஆற்றில் கரைத்தல், மதியம் உச்சிகால பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com