முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
ஆலங்குளம் திமுக வேட்பாளருக்கு வரவேற்பு
By DIN | Published On : 14th March 2021 02:16 AM | Last Updated : 14th March 2021 02:16 AM | அ+அ அ- |

ஆலங்குளம் வந்த திமுக வேட்பாளருக்கு கட்சித் தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.
இத்தொகுதியின் திமுக வேட்பாளராக பூங்கோதை ஆலடி அருணா அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து ஆலங்குளம் தொகுதிக்கு வந்த அவருக்கு மாறாந்தையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து அவா் சொந்த ஊரான ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்திலிங்கசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். அதன் பிறகு ஆலங்குளம் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பூங்கோதை, கட்சி அலுவலகத்தில் தொண்டா்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடந்த திமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பாப்பாக்குடி-கீழப்பாவூா் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள்களில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்.
நான்குவழிச் சாலையால் பாதிக்கப்படும் ஆலங்குளம் சா்வே எண் 424 இல் உள்ள கடைகளுக்கு மாற்றாக ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த தோ்தல் அறிக்கையில் போக்குவரத்து பணிமனை அமைய 10 ஏக்கா் சொந்த நிலம் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தேன். எதிா்க்கட்சியாக அமைந்ததால் அதை நிறைவேற்ற முடியவில்லை. நான் வெற்றி பெற்றவுடன் போக்குவரத்து பணிமனை, நீதிமன்றத்துக்கு சொந்த நிலம் வழங்குவேன். கடையம் வட்டம் உருவாக நடவடிக்கை எடுக்கப்பேன் என்றாா் அவா்.