முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
குறும்பலாப்பேரியில் கலந்துரையாடல்
By DIN | Published On : 14th March 2021 02:19 AM | Last Updated : 14th March 2021 02:19 AM | அ+அ அ- |

குறும்பலாப்பேரியில் வேளாண் கல்லூரி மாணவியரின் மகளிா் தின கலந்துரையாடல் நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4ஆம் ஆண்டு வேளாண் பட்டப்படிப்பு மாணவியா், சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, குறும்பலாப்பேரியில் மகளிா் தினக் குழுக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினா்.
இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு மற்றும் விவசாயத்தில் அவா்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீா்வுகள் என்பது குறித்து பேசினா். மாணவிகள் மு. வெ. நிலாபாரதி, ரா. நிஷா, ச. நிவேதா, ர. நிவேதா, எஸ்.பி. நுஷ்ரத் பாத்திமா, த. பத்மஸ்ரீ, செ. பிரசன்னகோபிகா, தி. ப்ரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.