முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
குறும்பலாப்பேரியில் சுகாதார பணி:திட்ட இயக்குநா் ஆய்வு
By DIN | Published On : 14th March 2021 02:19 AM | Last Updated : 14th March 2021 02:19 AM | அ+அ அ- |

குறும்பலாப்பேரியில் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்கிறாா் திட்ட அலுவலா் சரவணன்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியில் நடைபெற்றுவரும் பொது சுகாதாரப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் சரவணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கீழப்பாவூா் வட்டாரப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், சுகாதாரத் துறை, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குலசேகரப்பட்டி ஊராட்சி குறும்பலாப்பேரியில் நடைபெற்றுவரும் இப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் சரவணன் ஆய்வு செய்தாா்.
வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்தி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாரிராஜ், சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம், ஊராட்சிச் செயலா் வல்லாளமகராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.