முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சுரண்டையில் 2ஆவது நாளாக மழை
By DIN | Published On : 14th March 2021 02:16 AM | Last Updated : 14th March 2021 02:16 AM | அ+அ அ- |

சுரண்டையில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
சுரண்டை பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதையடுத்து சனிக்கிழமை 2 ஆவது நாளாக மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழையால் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது.