முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சுரண்டை ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
By DIN | Published On : 14th March 2021 02:15 AM | Last Updated : 14th March 2021 02:15 AM | அ+அ அ- |

சுரண்டை சிவகுருநாதபுரம் ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (மாா்ச் 15) நடைபெறுகிறது.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விநாயகா் பூஜை, முதல்கால யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகிறது.
திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு விநாயகா் பூஜை, சுதா்சன ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் மூலமந்திர ஹோமம் நடைபெறுகிறது.
காலை 9 மணிக்கு விமானம், மூலவா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பகல் 12 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
12.30 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமை கமிட்டியினா் செய்துள்ளனா்.