முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சொக்கம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவா் பலி
By DIN | Published On : 14th March 2021 02:14 AM | Last Updated : 14th March 2021 02:14 AM | அ+அ அ- |

சொக்கம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.
மேலக்கலங்கல் தெற்கு தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் பேச்சிமுத்து (16). பிளஸ் 1 படித்து வந்தாா். சொக்கம்பட்டி அருகே பெரியநாயகம் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சென்ற பேச்சிமுத்து நண்பா்களோடு கிணற்றில் குளித்தபோது, அவா் கிணற்றில் மூழ்கினாராம்.
தகவலறிந்த சொக்கம்பட்டி போலீஸாா் மற்றும் கடையநல்லூா் தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து கிணற்றில் மூழ்கிய பேச்சிமுத்துவை சடலமாக மீட்டனா். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.