முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
முகக் கவசம் அணிய அதிகாரிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 14th March 2021 02:18 AM | Last Updated : 14th March 2021 02:18 AM | அ+அ அ- |

பேருந்து நிலையக் கடைகளில், முகக் கவசம் அணிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் சுகாதாரத் துறையினா்.
சங்கரன்கோவிலில், முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து சுகாதாரத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சங்கரன்கோவில் நகராட்சி ஆணையா் சாந்தி உத்தரவின்பேரில் சுகாதாரத் துறை அலுவலா் பாலசந்தா், வட்டார மருத்துவ அலுவலா் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையாபாஸ்கா், மாதவராஜ்குமாா், கருப்பசாமி, சக்திவேல் உள்ளிட்டோா் நகரப் பகுதியில் மக்கள் கூடும் இடங்களில் உள்ள வணிக நிறுவனங்ள், காய்கனிக் கடைகள், பேருந்து நிலையக் கடைகள், தொழில் நிறுவனங்களுக்கு சென்று, முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி, விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.