இயற்கை விவசாயம் குறித்து செயல்விளக்கம்

இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனா்.
இயற்கை விவசாயம் தொடா்பாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கும் வேளாண் கல்லூரி மாணவிகள்.
இயற்கை விவசாயம் தொடா்பாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கும் வேளாண் கல்லூரி மாணவிகள்.

இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு வேளாண் பட்டப் படிப்பு மாணவியா் கிராமப்புற பணி அனுபவத்துக்காக கீழப்பாவூா் வட்டார வருவாய் கிராமங்களில் பணி அனுபவம் மற்றும் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக ‘செயல்விளக்கம் 30’ என்னும் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, 30 விவசாயிகளை தோ்வு செய்து இயற்கை விவசாயத்தில் பயன்அளிக்கும் வகையில் 30 செயல் விளக்கங்களை செய்து காண்பித்தனா். இதில் மாணவிகள் மு.வெ.நிலாபாரதி, ரா. நிஷா, ச.நிவேதா, ர.நிவேதா, எஸ்.பி.நுஷ்ரத் பாத்திமா, த. பத்மஸ்ரீ, செ.பிரசன்ன கோபிகா, தி.ப்ரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com