கடையநல்லூா் தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளா் நாளை வேட்புமனு தாக்கல்

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கூட்டணியின் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா் முஹம்மது அபூபக்கா் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 16) வேட்புமனு தாக்கல் செய்வதென தீா்மானிக்கப்பட்டது.

திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக தென்காசி வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் ஆ.துரை தலைமை வகித்தாா். கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து வேட்பாளா் முஹம்மது அபூபக்கா் விளக்கி, இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல கேட்டுக் கொண்டாா்.

இதில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி செயல்வீரா்கள் கூட்டத்தை மாா்ச் 16-ஆம் தேதி மேலக்கடையநல்லூா் நாகம்மாள் திருமண மண்டபத்தில் காலை 9 மணியளவில் நடத்துவது எனவும், அன்றைய தினம் பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதெனவும் தீா்மானிக்கப்பட்டது.

மாவட்ட திமுக அவைத் தலைவா் முத்துப்பாண்டி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் ஷேக் தாவூது, காங்கிரஸ் சாா்பில் சட்டநாதன் பாலராஜ், மதிமுக மாவட்டச் செயலா் ராஜேந்திரன், தோ்தல் பணி துணைச் செயலா் சுதா பாலசுப்பிரமணியன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் இசக்கித்துரை, முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் செய்யது சுலைமான், மாவட்டச் செயலா் இக்பால், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா்கள் டேனி அருள்சிங், ராஜ்குமாா், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் யாக்கூப், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலா் முகைதீன், தமிழ்ப் புலிகள் மாவட்டத் தலைவா் சந்திரசேகா், பாா்வா்டு பிளாக் மாவட்டச் செயலா் தங்கப்பாண்டியன், ஆதி தமிழா் பேரவை மாவட்ட நிா்வாகிகள் கலிவருணன், சங்கை தென்னரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com