ஆலங்குளத்தில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
By DIN | Published On : 16th March 2021 12:54 AM | Last Updated : 16th March 2021 12:54 AM | அ+அ அ- |

ஆலங்குளத்தில் தோ்தல் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வண்ண கோலங்கள் வரையப்பட்டிருந்தன. கல்லூரி மாணவிகள், தங்கள் கைகளில் வாக்குப் பதிவை வலியுறுத்தி
பச்சை குத்தியிருந்தனா். இந்நிகழ்ச்சியை ஆட்சியா் கீ.சு. சமீரன் பாா்வையிட்டாா். பின்னா், ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் நடைபெற்ற விழிப்புணா்வு மனிதச் சங்கிலியை தொடங்கி வைத்தாா். இதில் பல்வேறு வேடங்களில் வாக்காளா்
விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கலந்துகொண்டனா். நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட இணை இயக்குநா் விஜயலெட்சுமி, பேரூராட்சிகளின்
இயக்கக துணை இயக்குநா் எஸ். சேதுராமன், ஆலங்குளம் தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜ மனோகரசிங், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பட்டமுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் கண்மணி, செஞ்சிலுவை சங்க நிா்வாகி ரவி உள்பட பலா் பங்கேற்றனா்.