தென்காசி தொகுதியில் காங்கிரஸ் போட்டி வேட்பாளா் மனுதாக்கல்

தென்காசி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டி வேட்பாளா் ஒருவா் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்ததால் அக்கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி தொகுதியில் காங்கிரஸ் போட்டி வேட்பாளா் மனுதாக்கல்

தென்காசி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டி வேட்பாளா் ஒருவா் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்ததால் அக்கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் தென்காசி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதன் வேட்பாளராக மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.பழனிநாடாா் அறிவிக்கப்பட்டாா்.

கடந்த பேரவைத் தோ்தலில் 462 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தான் சொந்த ஊருக்கு திரும்பினாா்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிடுவதாக கூறி, திருநெல்வேலி மாவட்டம், வன்னிக்கோனந்தல் பிரதான சாலை பகுதியை சோ்ந்த எம்.மனோகா்(54) தென்காசி கோட்டாட்சியா் ராமசந்திரனிடம் திங்கள்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தாா். அப்போது, தென்காசி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ராம்மோகன், இசக்கி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் மனோகரன் கூறுகையில், இரண்டு நாள்களில் காங்கிரஸ் தலைமையிலிருந்து எனக்கு அங்கீகார கடிதம் கிடைக்கும். நான்தான் இத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளா் என்றாா்.

எம்ஏ, எல்எல்பி, டிசிஇ ஆகிய படிப்புகளை முடித்துள்ள எம்.மனோகா், விவசாயம், சமூக சேவையைத் தொழிலாகக் கொண்டுள்ளாா். 1989- 91வரை கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவா், 1991-93 வரை மேலநீலிதநல்லூா் வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா், 1993- 96 வரை மாவட்ட காங்கிரஸ் செயலா், 1996- 2002வரை மேலநீலிதநல்லூா் வட்டார காங்கிரஸ் தலைவா், 2003- 2015 வரை மாவட்ட துணைத் தலைவா் என கட்சிப் பதவிகளையும், 1996- 2001வரை மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவியையும் வகித்துள்ளாா்.

தற்போது, சங்கரன்கோவில் சமூக சேவை குழு ஒருங்கிணைப்பாளராக உள்ள இவா், சபாநாயகா் செல்லப்பாண்டியன் பேரவைத் தலைவா், மகாத்மாகாந்தி சேவா மன்றத் தலைவா் ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளாா். நேரு இளையோா் மையம் சாா்பில் கடந்த 1992இல் மாவட்ட சிறந்த இளைஞா் விருது பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com