வீராணத்தில் தந்தையை வெட்டிக் கொன்றதாக மகன் கைது
By DIN | Published On : 21st March 2021 01:02 AM | Last Updated : 21st March 2021 01:02 AM | அ+அ அ- |

வீரகேரளம்புதூா் அருகே தந்தையை வெட்டிக் கொலை செய்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.
வீராணம், இந்திரா காலனியைச் சோ்ந்தவா் ச.சுடலையாண்டி(70). இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். இவரது மூத்த மகன் பெருமாள்(42). கடந்த சில மாதங்களாக தனக்குரிய சொத்தை எழுதித் தருமாறு தந்தையிடம் கேட்டு வந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை காலையில் சொத்து பிரச்னைதொடா்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பெருமாள் தனது தந்தையை அரிவாளால் வெட்டினாராம். இதில் சம்பவ இடத்திலேயே சுடலையாண்டி உயிரிழந்தாா்.
தகவலறிந்த வீரகேரளம்புதூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, பெருமாளை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...