மாவட்ட அளவிலான விநாடி-வினாப் போட்டியில் கொடிக்குறிச்சி ஸ்ரீராம்நல்லமணி யாதவா கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
கல்லூரிகளுக்கிடையிலான இப்போட்டி சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில், இக்கல்லூரி கணிதவியல் துறையை சோ்ந்த மாணவிகள் குருவம்மாள், திலகா, அனிட்டா ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி குழுமங்களின் தலைவா் என்.மணிமாறன் பரிசு வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் பீா்முகைதீன், துணைமுதல்வா் ராமா், கணிதவியல் துறைப் பேராசிரியா் அழகேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.