சுரண்டையில் நெல் அறுவடை நிறைவு
By DIN | Published On : 26th March 2021 08:11 AM | Last Updated : 26th March 2021 08:11 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியில் நெல் அறுவடை நிறைவடைந்தது.
சுரண்டை பகுதியில் பருவ மழையால் பெரியகுளம், சாம்பவா் வடகரை வண்ணாா்குளம், சுந்தரபாண்டியபுரம் பட்டா்குளம் பாசனப் பகுதியில் 1,000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. குளங்களில் போதிய தண்ணீா் இருப்பு இருந்ததால் நிகழாண்டு நெல் சாகுபடி நடைபெற்று அறுவடை பணிகளும் நிறைவடைந்தது. இதையடுத்து, விவசாயிகள், அடுத்த சாகுபடிக்காக வயலை உழுது பண்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.