சங்கரன்கோவிலில் தோ்தல் நடத்தும் அலுவலா் மீது திமுக புகாா்
By DIN | Published On : 29th March 2021 02:25 AM | Last Updated : 29th March 2021 02:25 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மீது தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரனிடம் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளித்தாா்.
மனு விவரம்: சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலராக,கோட்டாட்சியா் முருகசெல்வி , தன்னுடைய சக ஊழியா்களிடம் திமுக வேட்பாளா் வெற்றிபெற்றாலும், அதிமுக வேட்பாளா் வெற்றிபெற்ாகவே அறிவிப்பேன். நான்தான் முடிவு செய்யவேண்டும்; மீண்டும் அதிமுக ஆட்சிதான் அமையும் என பேசியுள்ளாா். அமைச்சரின் இல்ல விழாவில் கோட்டாட்சியா் தான் முன்னின்று நடத்தியுள்ளாா். எனவே, அவரை இந்தத் தொகுதியிருந்து மாற்றிவிட்டு வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மனு அளித்தபோது, தென்காசி நகரச் செயலா் சாதிா், ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம், சீவநல்லூா் சாமித்துரை, வழக்குரைஞா் பிரிவு துணை அமைப்பாளா் வேலுசாமி, சங்கரன்கோவில் தொகுதி பாா்வையாளா் சரவணன், ஜெயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.