செங்கோட்டையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 29th March 2021 02:23 AM | Last Updated : 29th March 2021 02:23 AM | அ+அ அ- |

செங்கோட்டையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலா் ந.சிவஆனந்த் தலைமை வகித்தாா். செங்கோட்டை பால் உற்பத்தி மற்றும் விற்பனையாளா் சங்கத் தலைவா் பி.வி.நடராஜன் முன்னிலை வகித்தாா். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.
கடையநல்லூா் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள செங்கோட்டை, தென்காசி மேற்கு, செங்கோட்டை நகரத்துக்குள்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிா்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.