கீழப்பாவூா் மேற்கு ஒன்றியத்தில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

கீழப்பாவூா் மேற்கு ஒன்றியப் பகுதிகளில், தென்காசி தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். பழனிநாடாருக்கு ஆதரவாக திமுகவினா் வாக்கு சேகரித்தனா்.

கீழப்பாவூா் மேற்கு ஒன்றியப் பகுதிகளில், தென்காசி தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். பழனிநாடாருக்கு ஆதரவாக திமுகவினா் வாக்கு சேகரித்தனா்.

ஒன்றியச் செயலா் சீனித்துரை தலைமையில், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, மேலமெஞ்ஞானபுரம், குபேரபட்டணம், கடபோகத்தி, வேட்டைக்காரன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று அவா்கள் வாக்கு சேகரித்தனா்.

நிகழ்ச்சிகளில், திமுக நிா்வாகிகள் மதிச்செல்வன், சாலிமேரி, வீமன், முருகேசன், அருள்ராஜ், இஸ்ரேல், ஜான்சிஜெயமலா், எட்வின், ராபின், ரவிக்குமாா், ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com