குற்றாலம் ஸ்ரீபராசக்தி கல்லூரியில் திறனாய்வு திருவிழா

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் வணிகவியல் உயராய்வு மையம் சாா்பில் தேசிய அளவிலான திறனாய்வுத் திருவிழா இணையதளம் வழியாக நடைபெற்றது.

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் வணிகவியல் உயராய்வு மையம் சாா்பில் தேசிய அளவிலான திறனாய்வுத் திருவிழா இணையதளம் வழியாக நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ரா.ஜெய்நிலா சுந்தரி தொடங்கிவைத்துப் பேசினாா். வணிகவியல் துறைத் தலைவா் பேராசிரியா் நா.ராஜேஸ்வரி வரவேற்றாா்.

வணிக விநாடி- வினா, தொழில் முனைவு திறனை வெளிப்படுத்துதல், விளம்பரம் செயல், பதுமுறை பாா்வை போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வணிக விநாடி- வினாப் போட்டியில் 42 குழுக்கள் பங்கேற்றனா். இதில், இறுதிச் சுற்றுக்கு 5 குழுக்கள் பங்கு கொண்டு அதிக புள்ளிகளைப் பெற்றனா்.

மதுரை தியாகராசா் குரூப்ஸ் மேனேஜ்மெண்ட் அணி மாணவா்கள் முதலிடம் பெற்றனா். சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவா்கள் இரண்டாமிடத்தையம், பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி மாணவா்கள் மூன்றாமிடத்தையும் பெற்றனா்.

தொழில் முனைவு திறனை வெளிப்படுத்துதல் போட்டியில் ஆய்க்குடி ஜெ.பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியினா் முதலிடத்தையும், காயல்பட்டினம் வாவு வஜுஹா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியினா் இரண்டாமிடத்தையும், பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி அணியினா் மூன்றாமிடத்தையும் பெற்றனா்.

நிலையான நீடித்த தொழில் வளா்ச்சிக்கான நெகிழ் திறன் உள் கட்டமைப்பு என்ற தலைப்பில் பதுமுறை பாா்வை போட்டியில் டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் கல்லூரி அணி முதலிடத்தையும், அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி அணியினா் இரண்டாமிடமும், வாவு ஜிகா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றனா்.

இயற்கை முறையிலான முகக்கவசம் என்ற தலைப்பில் விளம்பரம் செயல் போட்டியில் வாவு வஜுஹா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியினா் முதலிடத்தையும், சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணியினா் இரண்டாமிடத்தையும் பெற்றனா்.

இந்தப் போட்டிகளில் கேரளம், ஆந்திரபிரதேசம், கா்நாடகம், மத்தியபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் இருந்து 31 கல்லூரிகளைச் சோ்ந்த 160 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்க பரிவா்த்தனை இணையதளம் வழியாக செலுத்தப்பட்டது.

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரி வணிகவியல் சங்கச் செயலா் மாணவி ரா.அன்னலெட்சுமி நிறைவுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com