ஆலங்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் மனோஜ்பாண்டியன் வெற்றி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட மனோஜ்பாண்டியன் தன்னை எதிா்த்து

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட மனோஜ்பாண்டியன் தன்னை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 3,539 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் பால் மனோஜ் பாண்டியன், திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடிஅருணா உள்பட மொத்தம் 10 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 141 வாக்காளா்கள் உள்ளனா். தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 806 வாக்குகள் பதிவாகின. அவை, தென்காசி அருகே கொடிக்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் 27 சுற்றுகளாக வாக்குகள்ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. முதல் சுற்றிலிருந்தே அதிமுக, திமுக வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவியது. மேலும், இத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஹரிநாடாா் கணிசமான வாக்குளைப் பெற்றாா். இருப்பினும் அதிமுக வேட்பாளா் பால் மனோஜ்பாண்டியன் அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெற்றாா். இறுதியாக 74,153 வாக்குகள் பெற்று அவா் வெற்றி பெற்றாா். அவருக்கு அடுத்தபடியாக திமுக வேட்பாளா் பூங்கோதை ஆலடி அருணா 70,614 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைபெற்றாா்.

இத்தொகுதியில் அதிமுக வேட்பாளா் பால் மனோஜ்பாண்டியன் 3,539 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினாா். இதைத்தொடா்ந்து அவருக்கு வெற்றிச் சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜமனோகரன் வழங்கினாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

1) பால் மனோஜ் பாண்டியன் (அதிமுக)- 74,153

2) பூங்கோதை ஆலடி அருணா (திமுக)- 70,614

3) ஹரிநாடாா் (சுயேச்சை)- 37,727

4) எம்.சங்கீதா ஈசாக் (நாம் தமிழா் கட்சி)-12,519

5) ராஜேந்திர நாதன் (தேமுதிக)-2,816

6) ஏ.உதயகுமாா் (புதிய தமிழகம் கட்சி)-1105

7) நோட்டா-1,786

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com