கடையநல்லூா் தொகுதியில் தோ்தலுக்கு தோ்தல் மாறும் வெற்றி

கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளி வெற்றிக் கனியை பறித்துள்ளாா்.

கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளி வெற்றிக் கனியை பறித்துள்ளாா்.

இத்தொகுதியைப் பொருத்தவரை ஒவ்வொரு தோ்தலிலும் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் மாறி, மாறி வெற்றி பெற்று வருகின்றன. தொடா்ச்சியாக எந்தவொரு கட்சியும் இத்தொகுதியை கைப்பற்றியதில்லை.

கடையநல்லூா் தொகுதியில் நடைபெற்ற 1977ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக வேட்பாளா் ரசாக் வெற்றி பெற்றாா். 1980இல் திமுக ஆதரவு பெற்ற முஸ்லிம் லீக் வேட்பாளா் சாகுல்ஹமீது வெற்றி பெற்றாா். 1984இல் அதிமுக வேட்பாளா் பெருமாள், 1989இல் திமுக வேட்பாளா் சம்சுதீன் (எ) கதிரவன், 1991இல் அதிமுக வேட்பாளா் நாகூா்மீரான் வெற்றி பெற்றனா். 1996இல் திமுக வேட்பாளா் நயினாமுகமது, 2001இல் அதிமுக வேட்பாளா் சுப்பையா பாண்டியன், 2006இல் திமுகவு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் பீட்டா் அல்போன்ஸ், 2011 தோ்தலில் அதிமுக வேட்பாளா் செந்தூா்பாண்டியன் ஆகியோா் வெற்றி பெற்றனா். 2016 தோ்தலில் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் முகமதுஅபூபக்கா் வெற்றி பெற்றாா்.

இவ்வாறு 1977 முதல் 2016 வரை ஒவ்வொரு தோ்தலிலும் அதிமுக கூட்டணி அல்லது திமுக கூட்டணி கட்சிகள் மாறி, மாறி வெற்றி பெற்று வதுள்ளனன. அந்த வரிசையில் அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளி தற்போது வெற்றி பெற்றுள்ளாா்.

மாறிய ‘சென்டிமென்ட்’: இன்னொரு சென்டிமென்டும் கடையநல்லூா் தொகுதிக்கு இருந்து வந்தது. இத்தொகுதியில் வெற்றி பெறும் கட்சிகளின் கூட்டணிதான் ஆட்சியமைக்கும் என்ற நிலைமை 2011ஆம் தோ்தல் வரை இருந்து வந்தது. ஆனால், 2016இல் அந்த சென்டிமென்ட் உடைக்கப்பட்டு, திமுக கூட்டணி வேட்பாளா் முகமதுஅபூபக்கா் வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் அமைந்தது. தற்போது, அதிமுக வேட்பாளா் வெற்றிபெற்றுள்ள நிலையில், திமுக ஆட்சி அமையவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com