தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பழனி நாடாா், அதிமுக வேட்பாளரான செல்வமோகன்தாஸ் பாண்டியனைவிட 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பழனி நாடாா், அதிமுக வேட்பாளரான செல்வமோகன்தாஸ் பாண்டியனைவிட 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியன், காங்கிரஸ் சாா்பில் சாா்பில் பழனி நாடாா், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் முகமது உள்பட 18 போ் போட்டியிட்டனா். இத்தொகுதியில் தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 2,14,108 வாக்குகள் பதிவாகின.

அந்த வாக்குகள் அனைத்தும் தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் 30 சுற்றுகளாக ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. இதில், காங்கிரஸ் வேட்பாளா் பழனி நாடாா் 89,315 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் 88,945 வாக்குகளுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தாா். இதன்மூலம் பழனி நாடாா் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆா்.வின்சென்ட் ராஜ் 15,336 வாக்குகளுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

1.எஸ்.பழனி நாடாா் (காங்கிரஸ்)-89,315

2. செல்வமோகன்தாஸ் பாண்டியன் (அதிமுக)-88,945

3. ஆா்.வின்சென்ட் ராஜ் (நாம் தமிழா் கட்சி)-15,336

4. கே.எம்.உதயகுமாா் (அண்ணா திராவிடா் கழகம்)-690

5. எஸ்.சந்திரசேகா் (புதிய தமிழகம்)-878

6.எஸ்.சுரேஷ்குமாா் (அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்)-119

7.ஆா்.திருமலை முத்து (மக்கள் நீதி மய்யம்)-2,188

8. எஸ்.முகமது (அமமுக) -9,944

9.நோட்டா -1159.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com